மும்பையில் செயல்பட்டு வரும் "The Shipping Corporation of India Limited" நிரப்பப்பட உள்ள மரைன் பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Marine Engineer - 40
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையங்கள்: மும்பை, புது தில்லி, கொல்கத்தா மற்றும் சென்னை
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் பணியிடல் அமர்த்தப்படுவர்.
பயிற்சி கட்டணம்: ஆண்களுக்கு - ரூ.4,00,000. பெண்களுக்கு - 3,35,000
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.02.2017
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000. மற்ற பிரவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு பதவி, விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Vice President I/C, Flee Personnel Dept.,
3rd Floor, The Shipping Corporation of India Limited, Shipping House, 245, Madame Cama Road, Nariman Point, Mumbai - 400 021, Maharashtra.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.shipindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.