

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி இடம்: தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா
வயதுவரம்பு: 31.10.2016 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரிகள் 26க்குள் இருந்தால் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனு மதிக்கப்படும்.
தகுதி: குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வர்த்தகம் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம் .
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான இடத்தில் கையொப்பம், புகைப்படம் மற்றும் சுய சான்றிதழ் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Human Resources Development Department,
Tamilnadu Mercantile Bank Ltd., Head Office, # 57, V.E. Road, Thoothukudi-628002.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tmbnet.in/tmb&-careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.