துணை ராணுவப் படையில் 872 தலைமை காவலர் பணி

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவப் படையான சசாஸ்திர சீமா பல் அமைப்பில் தற்போது
Updated on
1 min read

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவப் படையான சசாஸ்திர சீமா பல் அமைப்பில் தற்போது காலியாக உள்ள 872 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. கம்யூனிகேஷன் துறை சார்ந்த துணை ஆய்வாளர் பிரிவில் - 16
2. உதவி துணை ஆய்வாளர் பிரிவில் - 110
3. ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் - 746
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் +2 முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உடல்தகுதி: உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீட்டர் இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 80 செ.மீட்டர் விரிவடையும் தன்மையில் குறைந்தபட்சம் 5 செ.மீட்டர் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: துணை ஆய்வாளர் பதவிக்கு ரூ.200, இதர பதவிகளுக்கு ரூ.100 கட்டணமாக இந்திய அஞ்சல் ஆணை அல்லது டி.டி. மூலம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sub Inspector / Head Constable
Inspector General, Frontier HQ SSB, Ganiadeoli, Ranikhet, District : Almora (UK) Pin No. 263645
Asst. Sub Inspector
Inspector General, Frontier HQ SSB, Guwahati, House No.345, Nikita Complex, G.S. Road, Khanapara, PO/PS : Khanapara, District : Kamrup, Guwahati (Assam), Pin. No: 781022.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssb.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com