கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் மருத்துவர், செவிலியர் வேலை

தமிழகத்தின் கோவையில் செயல்பட்டு வரும் விவசாயப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் மருத்துவர், செவிலியர் வேலை
Updated on
1 min read

தமிழகத்தின் கோவையில் செயல்பட்டு வரும் விவசாயப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விரைந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
1. மெடிக்கல் ஆபிசர் பிரிவு - 08
2. ஸ்டாப் நர்ஸ் பிரிவு - 05

வயது வரம்பு: மெடிக்கல் ஆபிசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவராகவும், செவிலியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தகுதி: மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.பி.எஸ்., முடித்திருப்பதோடு மெடிக்கல் கவுன்சிலிலும் பதிவு செய்திருக்க வேண்டும். நர்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் செவிலியர் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். நர்ஸ்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவமும், ஆப்ஸ்டட்ரிக்ஸ் மற்றும் கைனகாலஜி பிரிவுகளில் பணியாற்றிய முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Office of the Registrar, Tamil Nadu Agricultural University, Coimbatore - 641 003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnau.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com