டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசு தேர்வாணையம் சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள், டிஎன்பிஎஸ்சி-யின் tspsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த தேர்வின் விடைத்தாள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. சுமார் 1,032 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த தேர்வுக்காக விண்ணப்பித்த 8.18 லட்சம் தேர்வாளர்களில் 5 லட்சம் பேர் 1,911 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்களின் தரவரிசை நிலை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com