மின் ஆராய்ச்சி மையத்தில் பொறியியல் துறை முதுகலை பட்டதாரிகளுக்கு பணி

பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய மின் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு
Published on

பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய மின் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Associates - 02
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, இசிஇ பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து பவர் சிஸ்டம், எலக்ட்ராணிக்ஸ், பவர் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சல் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cpri.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com