காவல், சிறைத்துறை, தீயணைப்பு பணிகளுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2017 -ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் பணி,
காவல், சிறைத்துறை, தீயணைப்பு பணிகளுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தில் வெளியீடு
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2017 -ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் பணி, இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணி, தீயணைப்போர் பணிகளுக்கான ஹால் டிக்கெட்கள் தயாராக உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களுடைய ஹால் டிக்கெட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 4569 இடங்களும், ஆயுதப்படை இரண்டாம் நிலை காவல்படைக்கு 8568 இடங்களும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணிக்கு 1015 இடங்களும், தீயணைப்பு வீரர் பணிக்கு 1512 இடங்களும் காலியாக உள்ளன. இவற்றுக்கான எழுத்துத் தேர்வு 21.05.2017-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com