ராணுவ மருத்துவமனையில் வேலை: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!ராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.330/CivEst/Opt:2009-15/2017
பணி: Washerman -01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Military/Civilian துணிகளை நன்றாக துவைக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Boot Repairer - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tinsmith - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Chowkidar - 02
பணி: Ward Sahayika(Female) - 02
பணி: Safaiwala - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ww.davp.nic.in/WriteReadData/ADS/eng_10622_11_1718b.pdf என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விரைவு, பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Commanding Officer,
165 Military Hospital, PIN-903 165,
C/O 99APO
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.