நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கிளார்க் வேலை: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்ட சிவில் நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி, தமிழ்நாடு பொது மற்றும் சார்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கிளார்க் வேலை: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
2 min read

நாமக்கல் மாவட்ட சிவில் நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி, தமிழ்நாடு பொது மற்றும் சார்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியானவர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் இணைத்து தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


பணி: கணினி இயக்குபவர் - 06

தகுதி: கணினி அறிவியல் பிரிவில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 + இதர படிகள்.

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 + இதர படிகள்
தகுதி: குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்- 05
சம்பளம்: மாதம் ரூ.19,000 + இதர படிகள்
தகுதி: குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் மெசின் ஆப்பரேட்டர் - 07
சம்பளம்: மாதம் ரூ.16,600 + இதர சலுகைகள்
தகுதி: குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி: பதிவறை எழுத்தர் - 03
சம்பளம்: மாதம் ரூ.15,900 + இதர படிகள்
தகுதி: தகுதி: குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 18
சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர படிகள்
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

பணி: மசால்சி - 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள்.
தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: இரவுக் காவலர்
சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர படிகள்
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: துப்புரவு பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர படிகள்.
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.11.2017


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
நாமக்கல் மாவட்டம் - 637 003

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Publication%20-Tamil_30-10-2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com