தமிழக அரசில் 147 உதவி பொறியாளர் வேலை; பிப். 24-இல் எழுத்துத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள 147 பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 24-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி.,
தமிழக அரசில் 147 உதவி பொறியாளர் வேலை; பிப். 24-இல் எழுத்துத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
Updated on
1 min read

ஒருங்கிணைந்த பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள 147 பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 24-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

பணி: உதவி பொறியாளர்(13), உதவி பொறியாளர் (விவசாயம்) (117), இளநிலை எலக்டிரிக்கல் ஆய்வாளர் (03), தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்(14) உள்ளிட்ட 147 காலியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிச. 16-ஆம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த டிச. 19 ஆம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்: அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், உற்பத்தி, தொழிலகம், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், டெக்ஸ்டைல், விவசாயம் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100 என ஊதியமாக வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு: அதிகபட்ச மதிப்பெண்கள் 570. எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக 5 மணி நேரம் நடைபெறும். முதல் தாள் டிகிரி தரத்தில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கொண்டது. இரண்டாம் தாள் 200 மதிப்பெண்கள் கொண்டது. டிகிரி தரத்தில் பொது அறிவில் 75 வினாக்களும் பத்தாம் வகுப்பு தரத்தில் 25 திறனறிவுத் தேர்வு வினாக்கள் என 100 வினாக்கள் கொண்டது. நேர்முகத்தேர்வு மற்றும் ரெக்கார்ட்ஸ் சோதனைக்கு 70 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_26_CESE_Notifications.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com