தமிழக அரசில் கல்லூரி நூலகர், மாவட்ட நூலக அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் கல்லூரிகள், மாவட்ட நூலகங்கள் மற்றும் அண்ணா பொது நூற்றாண்டு நூலகம் மற்றும் நூலகங்கள் துறையில் காலியாக உள்ள
தமிழக அரசில் கல்லூரி நூலகர், மாவட்ட நூலக அதிகாரி வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக அரசின் கல்லூரிகள், மாவட்ட நூலகங்கள் மற்றும் அண்ணா பொது நூற்றாண்டு நூலகம் மற்றும் நூலகங்கள் துறையில் காலியாக உள்ள நூலகர், நூலக அதிகாரி போன்ற காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
   
பணி: College Librarian 
காலியிடங்கள்: 21 + 9  
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6000 

பணி: District Library Officer
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400

பணி: Assistant Librarian and Information Officer 
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் 9300 - 34800 + தர ஊதியம் ரூ.4700.

எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) சமர்ப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி: 20.12.2017 

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 22.12.2017 

எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 24.02.2018 (எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது) 

பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்: அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.200 செலுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். 

மேலும் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_27_NEW_LIBRARIAN_NOTIFICATION.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com