இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் வேலை
Updated on
1 min read

இந்திய விமான நிலைய ஆணையத்தின் தில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள 84 இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பிரிவு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அக்டோபர் 14க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Assistant (Fire Service)

காலியிடங்கள்: 84

வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது 50 மதிப்பெண்களுடன் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம்: ஒரு ஆண்டுக்கு முன்பாக பெற்ற கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அல்லது இரண்டு ஆண்டுக்கு முன்பாக பெற்ற மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. இதனை ஆன்லைன், வங்கி கார்டுகள் மூலமும் செலுத்தலாம். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தகுதித் தேர்வு மற்றும் ஓட்டுநர் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: htt://www.airportsindia.org.in - Careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/advt%28PDF%29fs-NR-200917.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com