இர்கான் நிறுவனத்தில் ஒர்க் என்ஜினியர், சைட் சூப்பிரவைசர் வேலை

இர்கான் நிறுவனத்தில் ஒர்க் என்ஜினியர், சைட் சூப்பிரவைசர் வேலை

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இர்கான் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம் இந்திய அளவில் ரயில்வே
Published on

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இர்கான் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம் இந்திய அளவில் ரயில்வே தளவாடங்கள் மற்றும் இந்திய அளவில் தரமான பாளங்கள் போன்ற கட்டமைப்புகளை உருவாக்குதலில் அது முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிறுவனத்தில் தற்போது 146 ஒர்க் என்ஜினியர், சைட் சூப்பிரவைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Works Engineer, Civil 
காலியிடங்கள்: 88
சம்பளம்: மாதம் ரூ. 23,500

2. Site Supervisor, Civil 
காலியிடங்கள்: 33
சம்பளம்: மாதம் ரூ. 15,500

3. Site Supervisor, S&T 
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ. 23,500

4. Works Engineer,  Mechanical 
காலியிடங்கள்: 03

தகுதி: பொறியியல் துறையில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 250.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.10.2017 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/10/10/IRCON_Recruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com