தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் வேலை: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 129 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் வேலை: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 129 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள தமிழக இளைஞர்களிடமிருந்து வரும் 31-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Assistant cum Typist 

காலியிடங்கள்: 129 

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கணினி அறிவு வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ்-ஆங்கிலம் ஹையர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ்-ஆங்கிலம் ஆங்கிலம் மொழிகளில் ஏதேனும் ஒன்றில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்கவேண்டும். (பி.ஸி., எம்.பி.ஸி., எஸ்.ஸி., எஸ்.டி., பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு). 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.500) The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயரில், பாரத ஸ்டேட் வங்கியில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: http://www.jat.tnausms.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து-பிரிண்ட் -அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை  இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு "ரிஜிஸ்டர் போஸ்ட்-வித் அக்னா லெட்ஜ்மெண்ட் டியூ' முறையில், அல்லது கூரியர் மூலம் அனுப்பலாம்;  நேரிலும் சமர்ப்பிக்கலாம்.   

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Agricultural University, Coimbatore  641 003

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தட்டச்சு, கணினித்  திறன் தேர்வு  மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://14.139.13.70/Reports/JAT%20Information%20Brochure.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 31.10.2017  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com