

பொதுத்துறை நிறுவனமான "Air India Engineering Services" நிறுவனத்தில் நிரப்பப்பட 75 Driver மற்றும் Utility Hands பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Driver
காலியிடங்கள்: 15
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Utility Hands
காலியிடங்கள்: 60
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ,15,418
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும் .
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "Air India Engineering Services Limited" என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யா எடுத்து செலுத்த வேண்டும். டி.டி.யின் பின்புறம் விண்ணப்பதாரரின் முழுபெயர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடவும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள், பணி அனுபவச் சான்று போன்றவற்றின் அசல் மற்றும் நதல்களையும் இணைத்து தேர்வின் போது சமர்பிக்க வேண்டும்.
டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.10.2017
தேர்வுகள் நடைபெறும் இடம்: Office of Air India, Air India Engineering Complex, HR unit, APU Centre, NTA (New Technical Area), Dum Dum, Kolkata - 700 052
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.