கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். 2/2017

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III
காலியிடங்கள்: 09
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு, சுருக்கெழுத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ் தட்டச்சு, சுருக்கெழுத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு, சுருக்கெழுத்தில் இளநிலை, முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 12
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ecourts.gov.in/tn/karur என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன் மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தாந்தோன்றிமலை, கரூர் - 639 007
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com