ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்-4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017-2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்-4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017-2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 351 இடங்களுக்கு வரும் பிப். 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

கிராம நிர்வாக அலுவலர் (494), இளநிலை உதவியாளர் 4,301, தட்டச்சர் 3 ஆயிரத்து 463 என பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 351 காலியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெறவுள்ளது.

எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிச. 13-ஆம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த டிச. 15 ஆம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 மற்றும் விஏஓ, டிஇடி உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், இன்று மாதிரி வினா-விடை பகுதி தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

ஏற்கனவே, 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, மாதம்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

- மாநிலம்: தமிழ்நாடு

- தலைநகரம்: சென்னை

- ஆட்சிமொழி: தமிழ்

- அலுவல் மொழியாக - ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

- இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. 

- சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். 

- தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழி.

தமிழக அரசின் சின்னம்: திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம். இது 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.
- 1949-ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
- தென்னிந்தியாவின் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று.

மாநில பாடல்: - தமிழ்த்தாய் வாழ்த்து. (மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது.

- நடனம் - பரத நாட்டியம்  

- விலங்கு - வரையாடு

- பறவை - மரகதப் புறா

- மலர் - காந்தள்

- மரம் - ஆசியப் பனை

- விளையாட்டு - சடுகுடு

- இணையதளம் - www.tn.gov.in

- ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு - IN-TN

- மக்கள் தொகை: 7,21,47,030 (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)

- ஆண்கள் - 36.137.975 

- பெண்கள் - 36.009.055 

- ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 7,423,832

- சிறுவர்கள் - 3.820.276 

- சிறுமிகள் - 3.603.556 

- மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61 சதவீதம்

- பாலின விகிதம் - ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர்.

- மக்கள் தொகை அடர்த்தி - ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். 

- நகரப்புறங்கள் - 48,40 சதவீத மக்களும், கிராமப்புறங்களில் 51,60 சதவீத மக்களும் வாழ்ந்து வருகின்றனர். 

- இந்தியாவின் ஏழாவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் - தமிழ்நாடு

- படிப்பறிவு - 51, 837,507 (80.33 சதவீதம்)

- ஆண்கள் - 28.040.491 (86,77 சதவீதம்)

- பெண்கள் - 23.797.016 (73,44 சதவீதம்)

மாநில நிர்வாகங்களின் பட்டியல்:
- மாவட்டங்கள் -  32 

- தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன.

- ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன

- தற்போது மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. 

- விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்று அமையப் பெற்றுள்ளன.

- நாடாளுமன்ற தொகுதிகள் - 39

- மாநிலங்களவை தொகுதி - 18

- சட்டப்பேரவை தொகுதிகள்  - 234

- மாநகராட்சிகள் - 12 

- நகராட்சிகள் - 125

- பேரூராட்சிகள் - 529 

- பஞ்சாயத்து யூனியங்கள் - 385 (ஊராட்சி ஒன்றியங்கள்)

- கிராம் பஞ்சாயத்துக்கள் - 12,524 (ஊராட்சி மன்றங்கள்)

- வருவாய் பிரிவுகள்  - 85

- தாலுக்கா - 290 

- தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானது. 

- தற்கால இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்று காலத்துக்கு முன்பே மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்லவ அரசு காலத்தியிலிருந்துதான் வரலாறு உள்ளது. 

- சேர, சோழ, பாண்டிய பேரரசுகள், பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்களைத் தொடர்ந்து பல்லவர்கள் முக்கிய அரசாக இருந்தது. 

- சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும், பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர்.

- வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இஸ்லாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவில் மற்ற பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. 

- 14-ஆம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. 

- ஐரோப்பிய நாடுகளில் இருந்து வணிகம் செய்ய வந்தவர்கள் -  போர்ச்சுக்கிசீயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்

- கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட இடம் மற்றும் ஆண்டு - மசூலினிப்பட்டினம் என்ற இடத்தில் 1611ல் தொடங்கப்பட்டது.

- தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் 18ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 

- இந்திய சுதந்திரத்திற்குப் பின் மொழியின் எல்லைகளை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. 

- தமிழ்நாடு வடக்கில் ஆந்திரா மற்றும் கர்நாடகமும், மேற்கில் கேரளாவும், கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலும் எல்லையாக கொண்டுள்ளது. 

- தமிழ்நாட்டின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். 

- விளைநிலங்களின் அளவு சுமார் 56.10 மில்லியன் ஹெக்டர் ஆகும் (2007-2008-ஆம் ஆண்டின் கணக்குப்படி). 

- முதன்மை உணவுப் பயிர்கள்: நெல் மற்றும் தானிய வகைகள். 

- பணப்பயிர்: கரும்பு, பருத்தி, மிளகாய், சூரியகாந்தி மற்றும் கடலைப் பயிரிடப்படுகிறது. 

- தோட்டப்பயிர்கள்: தேயிலை, காப்பி, ரப்பரும் பயிரிடப்படுகிறது. உயிரின உரங்களை தயாரிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது

- தமிழ்நாட்டின் முக்கிய தொழிலாக பருத்தி, கனரக வாகன தயாரிப்பு, இரயில் பெட்டி தொழிற்சாலை, உதிரிப்பாகங்கள் தயாரிப்பு, சிமெண்ட், சர்க்கரை, காகிதம் மற்றும் தீப்பெட்டி உற்பத்தி.

- மென்பொருள் தயாரிப்புக்காக சென்னை தரமணியில் மென்பொருள் தொழிற்நுட்ப பூங்கா நிறுவப்பட்டுள்ளது. 

- 2006-2007ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள மென்பொருள் மதிப்பு - சுமார் ரூ.20,700 கோடி 
- கனிமங்களான பளிங்கு, கருங்கல், பழுப்பு நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவை ஏற்றுமதி பொருட்களாக உள்ளன. 

- தோல், நூல், தேயிலை, காப்பி, புகையிலை மற்றும் கைத்தறிப் பொருட்கள், தோல் பதனிடும் தொழில் போன்றவை இந்தியாவில் அறுபது சதவிகித பங்கு வகிக்கிறது. 

- திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல். 

- உலகின் பல்வேறு மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

- தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது நூல் - திருக்குறள். 

- நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது.

- இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. 

- தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது. பின்னர் தரங்கம்பாடியிலும் சென்னையிலும் நிறுவப்பட்டது. 

- இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. 

முக்கிய நீர்பாசனம்:  பெரியார் அணை, வைகை அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு அணை.  வைகை, தாமிரபரணி, வெள்ளாறு, பெண்ணையாறு, அமராவதி ஆகியவை ஆற்று நீர் பாசனங்களாகும். 

மின்சாரம்: தமிழ்நாட்டில் மொத்த மின் தேவை சுமார் 8,249 மெகாவாட் மின்சாரம். இதில் மாநில மின்சார தொகுப்பிலிருந்து 5,288 மெகாவாட் மின்சாரமும், தனியார் நிறுவனங்களிடமிருந்து சுமார் 1,058 மெகாவாட் மின்சாரமும், மத்திய தொகுப்பிலிருந்து 1,093 மெகாவாட் மின்சாரமும் பெறப்படுகிறது 

போக்குவரத்து சாலை: தமிழ்நாட்டில் மொத்த சாலைகளின் நீளம் சுமார் 1,93,918 கி.மீட்டர் ஆகும். 

இரயில் வண்டி இருப்புப் பாதை: மொத்த தொடர்வண்டி இருப்புப் பாதை நீளம் 4,181 கி.மீட்டர். இதில் முக்கிய சந்திப்புகள் உள்ள நகரம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் திருநெல்வேலி.

ஆகாய விமானம்: தென்னிந்தியாவின் முக்கிய பன்னாட்டு விமானம் நிலையம் சென்னை. இது தவிர தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோயமுத்தூர் மற்றும் சேலத்தில் விமான நிலையங்கள் உள்ளன. 

துறைமுகம்: தமிழ்நாட்டில் முக்கிய கப்பல் துறைமுகங்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி. இது தவிர 7 சிறிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றுள் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் முக்கியமானவை. 

சுற்றுலாதலங்கள்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னை, மாமல்லபுரம், பூம்புகார், காஞ்சிபுரம், கும்பகோணம், தராசுரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், ராமேசுவரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேளாங்கன்னி, நாகூர், சித்தன்னவாசல், கழுகுமலை, குற்றாலம், ஒகனேகல், பாபநாசம், சுருளி நீர் தேக்கம், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஏலகிரிமலை, முதுமலை, முண்டன்துறை, களக்காடு, வேடந்தாங்கல், அண்ணா உயிரியல் பூங்கா ஆகியவை தமிழ்நாட்டின் சில முக்கிய சுற்றுலாதலங்கள். 

- பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கு மறு நாள் ஜல்லிக்கட்டு காளை விழாவாகும். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படுகிறது. 

- ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்றது - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர். 

- சித்திரை திருவிழா மதுரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 
- தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

- நவராத்திரி ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவில் பல பகுதிகளில், பல முறைகளில் கடவுளை வணங்குகின்றனர். இதன் முக்கிய குறிக்கோள் ஆற்றல், அறிவு, செல்வம் ஆகும். 

- கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கு புகழ் பெற்றது.

- ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு பெயர்பெற்றது. 
- கரூர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும் பெயர்பெற்றது.

- திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி.

- சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், சவ்வரிசி, மாம்பழ, பட்டு சேலை, பருத்தி உற்பத்தி, கனரக தொழிற்சாலைகள், மின்சார உற்பத்தி, கனரக வாகனங்கள் கட்டுமானம், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கு பெயர்பெற்றது. 

- நாமக்கல் - கோழிப் பண்ணைகளுக்கும், லாரிகளுக்கும் பெயர்பெற்றது. 
- சிவகாசி - அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும்

- காவரி பாசனம் நிறைந்த திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் விவசாயத்திற்கு பெயர்பெற்றது. 

- கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயம்.

- வேலூர் - தோல் தொழில்

- சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. 

- பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு கோடம்பாக்கம் திகழ்கிறது. 

- ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. 

- 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - 132.4 பில்லியன் அமெரிக்க டாலர்.

- இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122

- மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் தமிழ்நாடு முதலிடம். 

- வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று.

- இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 சதவீதம்.

- சென்னையில் யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட் கார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 

- சென்னையில் எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ் நிறுவனங்கள் உள்ளன. 

- பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா செயல்பட்டு வருகின்றன. நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனங்கள் வெளியேறி விட்டன.

- கறி-கோழி வளர்ப்பில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலம். 

- இந்தியாவிலேயே பால் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலம். 

- சிறப்பு பொருளாதார மண்டலம் -  92

- தொழிற் பூங்கா - 19

- ரிசர் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் (முன்னாள்) அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்.

- 2013-ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 சதவீதம். 

- 2004-2005-ஆம் ஆண்டுகள் கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.

- 1999/2000 கணிக்கெடுப்பின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 சதவீதம்.

- தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். 

- 2001–2011 காலக் கட்டத்தில் கல்வியறிவு 74,04 சதவீதம் இருந்து பின்னர் 80.33 சதவீதமாக அதிகரித்தது. 

- இன்று தமிழ்நாட்டில் ஆண்கள் 86,81 சதவீதமும் , பெண்கள் 73,86 சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளனர். 

- தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள்

- பொறியியல் கல்லூரிகள் 454, 

- கலைக் கல்லூரிகள் -1,150, 

- பள்ளிக்கூடங்கள் - 2550 

- மருத்துவமனைகள் - சுமார் 5,000 

- சென்னை மற்றும் திருச்சியில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்பக் கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டு வருகின்றன.

- புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றன. 

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com