மிஸ்பண்ணிடாதீங்க.. ரயில்வேயில் வேலை: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

ஜெய்பூரில் உள்ள "North Western Railway"-இல் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்பண்ணிடாதீங்க.. ரயில்வேயில் வேலை: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read


ஜெய்பூரில் உள்ள "North Western Railway"-இல் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sports Persons (Sports Quota)

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தேசிய, மாநில, பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விளையாட்டுத்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை "North western Railway Sports Association" என்ற பெயரில் ஜெய்ப்பூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது ஐபிஓ-வாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcjaipur.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்கள் நகல்களை இணைத்து சாதாரண தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, North Western Railway, Power House Road, Opposite DRM Office, Jaipur - 302 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrcjaipur.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com