மத்திய சுகாதாரத்துறையில் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர் வேலை வேண்டுமா?
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் (இஎஸ்ஐ) சென்னை கிளையில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 111
பணியிடம்: சென்னை
பதவி: Staff Nurse - 84
சம்பளம்: மாதம் ரூ. 44900 -142400
வயதுவமர்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Pharmacist (allopathy) - 09
சம்பளம்: மாதம் ரூ.29200 - 92300
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Social Guide/Social worker - 02
சம்பளம்: மாதம் ரூ. 25500 - 81100
வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Lab Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.21700 - 69100
பதவி: O.T Assistant - 05
சம்பளம்: மாதம் 21700 - 69100
பதவி: Pharmacist (Ayur) - 01
சம்பளம்: மாதம் ரூ. 29200 - 92300
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங், மருந்தாளுநர், சமூக சேவை, எம்எல்டி முடித்தவர்கள் சம்மந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் முழுமையான விவரங்களை அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in அல்லது www.esichennai.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/d41ac15ef39c1b35909e1abe92870cf9.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

