வேலை... வேலை... வேலை... தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள 36 உதவியாளர் பணியிடங்களுக்கான
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள 36 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: உதவியாளர் - 27
பணியிடம்: தருமபுரி

பணி: உதவியாளர் - 09
பணியிடம்: கிருஷ்ணகிரி

ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தனித் தனியான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.  வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... மண்டல இணை இயக்குநர், மண்ட இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பெரு மருத்துவமனை வளாகம், இராஜஜி நீச்சல் குளம் எதிரில், ஆட்சியர் அலுவலகம் அஞ்சல், தருமபுரி - 636705. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு http://dharmapuri.tn.nic.in/pdf/application.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... மண்டல இணை இயக்குநர், மண்ட இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, 659/1 பழைய பெங்களூரு சாலை, கால்நடை மருத்துவமனை அலுவலகம், லண்டன்பேட்டை, கிருஷ்ணகிரி 635001. மேலும் விவரங்களுக்கு http://www.krishnagiri.tn.nic.in/documents/aha_Post.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com