வேலை வேண்டுமா..? பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் ஈரோடு மாவட்டங்களில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு  இன்று
வேலை வேண்டுமா..? பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் ஈரோடு மாவட்டங்களில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு  இன்று வெளியிடப்பட்டுள்ளது 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: உதவியாளர் - 19

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.  

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.   

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை பெருமருத்துவமனை வளாகம், ஸ்டேட் பேங்க் ரோடு, பன்னீர் செல்வம் பார்க், ஈரோடு-638 001.. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு http://erode.nic.in அல்லது http://erode.nic.in/animal_husbandry/AHA_ApplicationForm_26022018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com