8-ம் வகுப்பு முடித்தவரா நீங்கள்... உங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தில் வேலை

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவுக் கழகத்தின் குஜராத் மண்டலத்திலும், டெப்போக்களிலும் காலியாக உள்ள
8-ம் வகுப்பு முடித்தவரா நீங்கள்... உங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தில் வேலை
Updated on
1 min read

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவுக் கழகத்தின் குஜராத் மண்டலத்திலும், டெப்போக்களிலும் காலியாக உள்ள 107 "வாட்ச்மேன்" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 107

பணி: வாட்ச்மேன்

வயது வரம்பு: 1.12.2017 தேதியின்படி 18 - 25த்துள் இருக்க வேண்டும். 

தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சக் கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.01.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் உத்தேசத் தேதி: 11.2.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.fcijobportalgujarat.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com