திருச்சி மாவட்ட நீதித்துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு அடிப்படையில் காலியாக உள்ள 28 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு
திருச்சி மாவட்ட நீதித்துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated on
1 min read

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு அடிப்படையில் காலியாக உள்ள 28 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 28

சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017ன் படி வரிசை எண் 1 மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராகவும் 32க்குள் இருக்க வேண்டும். முழுமையான அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆளறிச்சான்றிதழுடன் கலந்துகொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620 001

அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு ecourts.gov.in/tn/tiruchirappalli என்ற இணையதள வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notification%20ANo%20001%2022012018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com