நர்சிங் படித்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் வேலை

உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள 1126 ஸ்டாப் நர்ஸ்
nurse
nurse
Updated on
1 min read

உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள 1126 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: 2017/115

பணி: Staff Nurse Grade II Group 'B'

காலியிடங்கள்: 1126

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி (நர்சிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி (Post-Certificate) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டு பி.எஸ்சி (நர்சிங்), (Post-Basic) பட்டம் பெற்று இந்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: Rishikesh, Haridwar, Dehradun.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.3,000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com