

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 275 ‘Senior Factory Assistant’ பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Factory Assistant
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் 152 இடங்களும், திருவண்ணாமலைக்கு 35 இடங்களும், நீலகிரிக்கு 35 இடங்களும், ஈரோட்டிற்கு 9 இடங்களும், சேலத்தில் 11 இடங்களும், தஞ்சாவூரில் 33 இடங்களும் உள்ளன.
வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.omcaavinsfarecruitment.com/Aavin%20notification%20new%20english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.