ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை! 

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை! 
Updated on
1 min read


சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடம்: 05 

பணி: Driver – 01 
சம்பளம்: ரூ.19,500 - 62,000 

பணி: Store Attendant – 01
சம்பளம்: ரூ.15,900 - 50,400 

பணி: Office Assistant – 02 
சம்பளம்: ரூ.15,700 - 50,000 

பணி: Boat Lascar – 01 
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Commander, NCC Group Headquarters, Madras 'B', Chennai. 

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com