வேலை தேடும் சிவில் பட்டதாரியா நீங்கள்..? ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை

தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சென்னையில்
வேலை தேடும் சிவில் பட்டதாரியா நீங்கள்..? ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை
Updated on
1 min read

தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 9  துணை மேலாளர் (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 09

பணியிடம்: சென்னை

பணி: Deputy Manager (Civil)) - 9

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி OC பிரிவினர் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு கிடையாது.

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: OC, BC, MBC & DNC பிரிவினருக்கு ரூ.250, மற்ற பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை “The Managing Director, TCMPF Ltd., Chennai – 51” என்ற முகவரிக்கு டிடி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers’ Federation Limited, Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051.”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrhocapp050618.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com