டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் ஏர்மேன் வேலை

இந்திய விமானப்படையில் ‘ஏர்மேன்' (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல், ‘குரூப்-ஒய்' (நான் டெக்னிக்கல்) பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு
டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் ஏர்மேன் வேலை
Updated on
1 min read


இந்திய விமானப்படையில் ‘ஏர்மேன்' (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல், ‘குரூப்-ஒய்' (நான் டெக்னிக்கல்) பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்த திருமணமாகாத இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பயிற்சி: ‘ஏர்மேன்' (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல்

பயிற்சி: ‘குரூப்-ஒய்' (நான் டெக்னிக்கல்) 

தகுதி: குரூப் எக்ஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ்-டூ (10+2 முறையில்), இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அதாவது கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ்-டூ, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

குரூப்-ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் டூ, இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 14.07.1998 மற்றும் 26.06.2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

உடல்தகுதி: ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரமும், குறைந்தபட்சம் 55 கிலோ எடையும், 5 செ.மீ. விரியும் மார்பளவு திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.airmenselection.cdac.in அல்லது  www.careerindianairforce.cdac.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 13 முதல் 16-ஆம் தேதி வரை நடக்கும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com