வேலை... வேலை.. வேலை... நாளை 7,411 பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: வாய்ப்பை தவறவிடாதீர்கள் 

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை சனிக்கிழமை (மார்ச்.17) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலை... வேலை.. வேலை... நாளை 7,411 பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: வாய்ப்பை தவறவிடாதீர்கள் 
Updated on
1 min read

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை சனிக்கிழமை (மார்ச்.17) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சுமார் 7 ஆயிரத்து 411 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி பயன் பெறவும். 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. 

காலியிடங்கள்: சுமார் 7,411

தகுதி: 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், மற்றும் கல்வி பயிலாதவர்கள் என அவரவர் தகுத்திக்கேற்ப தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இந்த முகாமில் பல்வேறு தொழில்நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான ஆள்களை நேரடியாக தேர்வு செய்யவுள்ளனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் என இருபாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். 

கொண்டுவர வேண்டிய சான்றுகள்: வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வரும் அனைவரும் தங்களது சுயவிவரக் குறிப்புடன், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன் வரவேண்டும். 

முகாம் நடைபெறும் இடம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம். திருச்சிராப்பள்ளி.

மேலும், முழுமையான விவரங்கள் அறிய ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். அல்லது  http://dns1.bdu.ac.in/ptc/docs/job_fair_17_3_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com