வேலை வேண்டுமா..? தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் 63 உதவியாளர் வேலை

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின், சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 63 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான
வேலை வேண்டுமா..? தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் 63 உதவியாளர் வேலை
Updated on
1 min read

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின், சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள 63 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 63 

பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர் 

தகுதி: குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை 630 562 

விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து அணுப்ப வேண்டும். அஞ்சல் உறையை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sivaganga.tn.nic.in/Documents/Pdf/ahd/asst.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com