வேலை தேடுபவரா நீங்கள்... விண்ணப்பிக்கலாம் வாங்க... ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரிகள் வேலை

நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக
வேலை தேடுபவரா நீங்கள்... விண்ணப்பிக்கலாம் வாங்க... ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரிகள் வேலை
Updated on
1 min read

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தற்போது 2 ஆயிரம் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்தமுள்ள 2 ஆயிரம் பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பணி: Probationary Officer (PO)

காலியிடங்கள்: 2000

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.04.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1988 மற்றும் 01.04.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளை கொண்டதாக இருக்கும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்திய இளைஞர்கள் www.sbi.co.in அல்லது www.sbi.co.in/careers  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2018

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்கள் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/15214699781_SBI_PO_2018_ENGLISH.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

வங்கியில் பணிபுரிவதே தனது இலக்காக கொண்டுள்ள பட்டதாரி இளைஞர்கள் இந்திய அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com