பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி, இளநிலை அலுவலர்
பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி, இளநிலை அலுவலர், உதவி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12  

பணி: Management Trainee, Junior Officer, Assistant Officer (R & D and QC) 

தகுதி: பொறியியல் துறையில் வேதியியல் துறையில் எம்.எஸ்சி, பொறியியல் துறையில் Pulp and paper Technology பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் அல்லது அறிவியல் துறையில் இளநிலை பட்டத்துடன் Pulp and paper Technology முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இளநிலை அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட தகுதியுடன் 3 ஆண்டு பணி அனுபவமும், உதவி அலுவலர் பணிக்கு 5 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,900 - 17,100

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager(HR), Tamilnadu Newsprint and Palers Limited, Kagithapuram - 639136, Karur.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com