

இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 218 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 27க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Constable
காலியிடங்கள்: 218
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவமர்பு: 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் உடற்தகுதி, உடற்திறன் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.