விண்ணப்பித்துவிட்டீகளா..? கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - மிஸ்பண்ணிடாதீங்க! 

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீகளா..? கனரா வங்கி புரபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - மிஸ்பண்ணிடாதீங்க! 
Published on
Updated on
1 min read

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 800 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும். 

மொத்த காலியிடங்கள்: 800. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 404 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருப்பது அவசியம் அல்லது பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் கணினி குறித்து திறன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வயதுவரம்பு: 1.10.2018 தேதியின்படி நிலவரப்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 23700 - 980/7 - 30560 - 1145/2 - 32850 - 1310/7 - 42020 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வங்கி-நிதி பணிகள் சார்ந்த ஓராண்டு டிப்ளமா பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் தகுதியானவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 708 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.118 கட்டணமாக செலுத்த வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு https://canarabank.com/media/8121/rp-1-2018-web-advertisement-english-22102018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com