ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் கனரா வங்கி செக்யூரிட்டி மேலாளர் வேலை 

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 31 செக்யூரிட்டி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
canarabank
canarabank

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 31 செக்யூரிட்டி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 17 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 8 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 4 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 ஆண்டு அதிகாரி பணிக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி நிலவரப்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 31,705 - 45,950 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் தகுதியின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சலம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager Canara Bank Recruitment Cell, HR Wing Head Office, 12 JC Road, Bangalur 560002.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 708 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.118 கட்டணமாக செலுத்த வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு https://canarabank.com/media/8358/rp-2-2018-manager-security-web-publ-english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com