

நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ராணுவத்தின் தரைப்படைப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ கல்விப் பிரிவில் காலியாக உள்ள ஹவில்தார் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: HAVILDAR
காலியிடங்கள்: 20
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.ஏ., எம்.டெக்., பி.டெக்., பி.எஸ்சி., இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்களும், ஆங்கிலம், ஹிந்தி, உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதவியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, டீச்சிங் ஆப்டிடியூடு டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஓராண்டு பயிற்சிக்குப்பின் பணி நியமனம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Final_2018-19_SAC_Notfn_English_and_Hindi.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.