பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், எச்ஆர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான
பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
Published on
Updated on
1 min read


சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், எச்ஆர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Chennai Petroleum Corporation Ltd

மொத்த காலியிடங்கள்: 42

பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Engineer - 38
பதவி: IT&S Officer - 01
பதவி: Human Resources Officer - 02
பதவி: Safety Officer - 01

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் Technology in Chemical, Petroleum, Petrochemicals, Mechanical , Electrical, Electrical & Electronics, Civil, Computer Science, Information Technology, Electronics & Communication போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மனிவள பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ, பணியாளர் மேலாண்மை, தொழிற்துறை உறவுகள், தொழிலாளர் நலன், சமூக பணி, வணிக நிர்வாகத்தில் (எம்பிஏ) முதுகலை பட்டம் பெற்றவர்கள், தொழில்துறை பாதுகாப்பில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர் ரூ.500 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2018

மேலும் விவரங்கள் அறிய https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2018/Officers'%20Recruitment%202018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com