

வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ]
மொத்த காலியிடங்கள்: 72
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III(தற்காலிகம்)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தட்டச்சர் (முற்றிலும் தற்காலிகம்)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுகாதார பணியாளர்கள்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
பணி: இரவு காவலர் (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,00
தகுதி: தமிழில் எழுத், படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
பணி: துப்புரவு பணியாளர்கள்
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: முழு நேர பணியாளர் (மசால்ஜி)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 5000
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து தகவல் பரிமாற்றமும் districts.courts.gov.in.vellore மற்றும் dstricts.ecourts.gov.in/tn/vellore என்ற இணையதள வலைத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ்கலின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு தபால் மூலம் மட்டும் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் - 632 009.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2019
மேலும் முழுமையான விவரகங்கள் அறிய இங்கே கிளிக் செய்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.