ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில்  இரண்டாவது பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட்
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
Updated on
1 min read



பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில்  இரண்டாவது பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள துடிப்பான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 72

பணி: Operations Technician
காலியிடங்கள்: 66
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Boiler Technician
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில்  முதல் வகுப்பில் boiler
competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.590. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com