பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா பாராமெடிக்கல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை நிறுவனமான மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்
பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா பாராமெடிக்கல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பாராமெடிக்கல் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Public Health Nurse(PHN) - 15
சம்பளம்: மாதம் ரூ.38,000

பணி: Catering Supervisor - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Auxiliary Nursing Midwife (ANM) - 60
சம்பளம்: மாதம் ரூ.24,000

பணி: Dresser - 12
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Dietician - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: Cook - 01
சம்பளம்: மாதம் ரூ. 18,000

பணி: Mortuary Attendant(MTS)-07
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Receptionist - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 10, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் பாராமெடிக்கல் முடித்தவர்கள், பி,எஸ்சி (நர்சிங்)  முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்தவற்றை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager (HR) in BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/b3b51bc5e8b7bb7adcc75bfb83401626.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com