ஆவின் நிறுவனத்தில் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ஆவின் நிறுவனத்தில் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான
Published on


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 11

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: மூத்த தொழிற்சாலை உதவியாளர் -  04 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் ஐடிஐ  முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,700 

பணி: துணை மேலாளர் - 05 
தகுதி: பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பத் துறை பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,900

பணி: மேலாளர் - 02 
தகுதி: கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.   
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 37700 - 55,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers' Union Ltd., No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023. 

மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrkt050219.html  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com