ரூ.1,80,500 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..? 

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் காலியாக உள்ள கணக்கியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர்
ரூ.1,80,500 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..? 
Published on
Updated on
1 min read


தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் காலியாக உள்ள கணக்கியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Accounts Officer, Class III

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் 56,900 -1,80,500

வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. 

தகுதி: பட்டய கணக்காளர், கணக்காளர் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பதிவுக் கட்டணம்: ரூ.150 மட்டுமே.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை. 

எழுத்துத் தேர்வு: இரு தாள்கள் கொண்டது. அதாவது, தாள்- 1 Cost Accountancy இது 300 மதிப்பெண்கள், தாள் -II  General Studies இது 200 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்கள் கொண்டது. நேர்முகத் தேர்வுக்கு 70 மதிப்பெண்கள் என மொத்தம் 570 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_07_notifyn_accountofficer_class_III.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com