டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார் தெரியுமா..?

தமிழக அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர்
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார் தெரியுமா..?
Updated on
1 min read

தமிழக அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Curator

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.36700 -116200 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது. 

தகுதி: விலங்கியல், தாவரவியல், புவியியல், மானுடவியல் அல்லது இந்திய தொல்லியல், சமஸ்கிருதம், வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்மொழி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
பதிவுக் கட்டணம்: ரூ.150 மட்டுமே.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவை. எழுத்துத் தேர்வு தாள்- 1, தாள் -II என 500 மதிப்பெண்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு 70 மதிப்பெண்கள் என 570 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 
www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_06_Notifyn_Curator.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com