தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 38
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை
Updated on
1 min read


தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 38 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 38

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1.Assistant Engineer (Mechanical) - 01 
2.Farm Manager - 05 
3.Junior Engineer (Electrical) - 01
4. Steno-Typist Gr. III - 04 
5. Junior Assistant - 08 
6. Typist - 08 
7. Fishery Assistant - 02
8. Office Assistant - 01 
9. Seaman - 01 
10. Iceman - 01 
11. Sweeper - 01 
12. Museum Curator - 01  
13. Gardener - 01
14. Driver - 03 

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள், 8, 10 ஆம் தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை முடித்தவர்கள், பொறியியல் துறையில், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் “The Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam-611 002”  என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam - 611 002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20-%20non-teaching%20positions%20-%20advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் பெற http://tnjfu.ac.in/downloads/carrers/TNJFU-Non-teaching-staff-Application-terms-conditions-and-annexure.pdf லிங்கில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com