தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வேண்டுமா? 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள 224 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வேண்டுமா? 
Updated on
1 min read

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள 224 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 224

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 73
தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது கெமிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது Environmental, Chemical,  Environmental Science and Technology, Petroleum Refining and Petrochemical, Environmental Management போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Environmental Scientist
காலியிடங்கள்: 60
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
தகுதி: Chemistry, Bioligy, Zoology, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Microbiology, Marine Biology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry, Botany போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant (Junior Assistant)
காலியிடங்கள்: 36
தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் டிப்ளமோ, 6 மாத சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Typist
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பிரிவில் 6 மாத டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட 4 பணியிடங்களுக்கும் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, விதைவகள் உள்பட மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpcb.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2019 முதல் 23.04.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com