வேலை வேண்டுமா..? தமிழக மருத்துவத்துறையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் வேலை

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது ஒப்பந்த மற்றும் ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ள 1508 லேப்
வேலை வேண்டுமா..? தமிழக மருத்துவத்துறையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் வேலை
Updated on
1 min read



தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது ஒப்பந்த மற்றும் ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ள 1508 லேப் டெக்னீசியன் (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்) கிரேடு 3 நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

நிறுவனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் 

பணி: Laboratory TechnicianGrade-III 

காலியிடங்கள்: 1508

சம்பளம்: மாதம் ரூ.8,000

தகுதி: 12-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சி.எம்.எல்.டி ஓராண்டு பயிற்சி முடித்திருப்பதுடன், நல்ல உடலமைப்பு, நல்ல பார்வைத் திறன் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.எம்.எல்.டி கல்வியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

இந்த பணி குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/LT_Gr_III_2019_Notification_19112019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேதி: 19.11.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி: 09.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com