அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா? 

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கிளார்க் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை
அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா? 
Updated on
1 min read

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கிளார்க் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: 

மொத்த காலியிடங்கள்: 11 
பணி: புரொபஷனல் அசிஸ்டெண்ட் சிவில் பிரிவு - 01 
பணி: எலெக்ட்ரிக்கல் பிரிவு - 2 
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.627 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: கிளார்க் அசிஸ்டெண்ட் - 01 
பணி: உதவியாளர், மின்பழுது நீக்குபவர் - 7 
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சு மற்றும் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.434

விண்ணப்பிக்கும் முறை:  https://www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, வகுப்பு சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Professor & Estate Officer, Anna University, Chennai-600 025 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/EO%20Recruitment%20Notifycation%20Nov.2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com