இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Highways Authority of India
பணி: Deputy Manager(Technical)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று GATE-2019 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும் விண்ணப்ப ஒப்பந்த கடிதத்துடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2225/1_Advertisment_DM_T_-30.09.2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019