தமிழக அரசில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 63 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
தமிழக அரசில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்
Updated on
1 min read



தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 63 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 63

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://dish.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://dish.tn.gov.in/assets/pdf/notifyrecruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com