

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் மற்றும் சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பொறியாளர் - 19
சம்பளம்: மாதம் ரூ.23,000
பணி: மேலாண்மை தொழில்துறை பயிற்சி - 06
வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ராணிக்ஸ் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ரூமெண்டேசன் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.in அல்லது http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Website-Advertisement-EWandA-SBU-22-10-19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.11.2019
மேலாண்மை தொழில்துறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.